இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மெரினாவில் நாளை(அக்டோபர் 6) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ” மெரினாவில் நாளை நடக்க இருக்கும் விமான சாகச நிகழ்ச்சியை காண வரும் மக்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி
மேலும் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவான்மியூர் பகுதியில் இருந்து பாரிமுனை வரை இருக்கும் காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஸ் வைத்துள்ளவர்கள் மட்டுமே காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே Pass இல்லாதவர்கள் வாலாஜா சாலையில் இருக்கும் வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் சர்தார் படேல் சாலை- காந்தி மண்டபம் சாலை- அண்ணா சாலை வழியாக செல்ல போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது – வெளியான முக்கிய தகவல்!
அதன்படி, திருவான்மியூர் – பாரிமுனை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை- தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக செல்லலாம். வாகன நெரிசலை தவிர்க்க மக்கள் அனைவரும் மெட்ரோ ரயில், மாநகர பேருந்துகள், பறக்கும் ரயிலை பயன்படுத்த டிராபிக் போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் கனமழை
மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு
திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை