தற்போது சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட மொத்தம் மதிப்பீட்டில் 65% நிதியை மத்திய அரசு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்ட நிதி ஒதுக்கீடு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மெட்ரோ ரயில் திட்ட பணிகள் :
தற்போது சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மெட்ரோ 2வது கட்டப் பணிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இருப்பினும் இதற்கு மத்திய அரசு தனது பங்கு நிதியை ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததால் மெட்ரோ ரயில் பணிகள் கால தாமதமாகின என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் பிரதமர் சந்திப்பு :
இதனையடுத்து அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து தற்போது மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஓப்புதல் வழங்கியுள்ளது. Chennai Metro Rail 2nd Phase Project Fund Allocation
நிதி ஒதுக்கீடு :
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டத்திற்கான நிதி பகிரவு குறித்து மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.
அதில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட மொத்தம் மதிப்பீட்டில் 65% நிதியை மத்திய அரசு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
வருமான வரி ரீபண்ட் பெற புதிய விதிமுறை – மத்திய நிதி அமைச்சகம் தகவல் !
அந்த வகையில் மொத்த மதிப்பீட்டில் ரூ. 33 ஆயிரத்து 593 கோடி கடன் கடன் மூலமும், ரூ. 7 ஆயிரத்து 425 கோடி சார்பு நிதிநிலை கடனையும் மத்திய அரசு வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் பன்னாட்டு முகமையிடம் இருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகவே கருதப்படும். இந்நிலையில் மதிப்பீட்டுச் செலவுக்கு மீதமுள்ள 35 சதவீதம் மாநில அரசு நிதி உதவி செய்யும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.