சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2023. தமிழகத்தின் தலைநகர் சென்னையின் பொது போக்குவரத்துகளில் மக்கள் அதிகம் பயன்படுத்துவது மெட்ரோ ரயில். அப்படியான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இயக்குனர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 3,40,000 வரையில் ஊதியம் !
காலியாக இருக்கும் இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
நிறுவனத்தின் பெயர் :
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ( Chennai Metro Rail Limited ) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
Director ( Finance ) – இயக்குனர் ( நிதி ) பணியிடங்கள் சென்னை மெட்ரொ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு இயக்குனர் காலிப்பணியிடம் இருப்பதாக நிறுவனம் அறிவித்து உள்ளது.
கல்வித்தகுதி :
அரசின் அனுமதியுடன் இயங்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் MBA அல்லது CA / CMA முடித்தவர்கள் இயக்குனர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயதுத்தகுதி :
58 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்களே மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 40,000 சம்பளம் !
சம்பளம் :
இயக்குனர் காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ. 1,80,000 முதல் ரூ. 3,40,000 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும். சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2023.
அனுபவம் :
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவன காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 5 முதல் 25 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
01.12.2023ம் தேதியில் சென்னை மெட்ரா ரயில் லிமிடெட் நிறுவனத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தபால் மற்றும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மேலாளர் ( HR ) ,
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ,
பெருநகரங்கள் ,
அண்ணா சாலை ,
நந்தனம் ,
சென்னை – 600 035 ,
தமிழ்நாடு .
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம்
2. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
3. கல்வி சான்றிதழ்
4. பிறப்பு சான்றிதழ்
5. சாதி சான்றிதழ்
6. அனுபவ சான்றிதழ்
7. மின்னஞ்சல் முகவரி
தேர்ந்தெடுக்கும் முறை :
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்படுவர்.