Home » செய்திகள் » சென்னையில் மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம் ! – சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வறிக்கை தயாரிக்க நிர்வாகம் முடிவு !

சென்னையில் மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம் ! – சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வறிக்கை தயாரிக்க நிர்வாகம் முடிவு !

சென்னையில் மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம் ! - சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வறிக்கை தயாரிக்க நிர்வாகம் முடிவு !

சென்னையில் மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம். சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவை தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில் நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. மேலும் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 2ஆம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சென்னையின் முக்கிய வழித்தடங்களில் உள்ள இடங்களை இணைக்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ நிறுவனத்தின் சார்பில் இது குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் சென்னை மாதவரத்தில் இருந்து விம்கோ நகர் வழியாக எண்ணூர் வரையிலான 16 கி.மீ அளவில் புதிய வழித்தடம் அமைப்பதிற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை ! விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தகவல் !

மேலும் சாத்தியக்கூறு பற்றி ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கு முறையான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top