சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024. இந்த கல்வியாண்டிற்கான இலவச தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து நேரடியாக சமர்ப்பித்து பயிற்ச்சியில் சேரலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு NCVT சான்றிதழுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது.

computer operator

plumber

fitter

vehicle motor mechanic

electrician

electronic mechanic

மொத்த சேர்க்கை எண்ணிக்கை – 184

computer operator, plumber படிப்புகளுக்கு பயிற்சி காலம் -1 வருடம்

மற்ற அனைத்து பணிகளுக்கு பயிற்சி காலம் – 2 வருடம்

plumber படிப்பிற்கு மட்டும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்ற அனைத்து படிப்புகளுக்கும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 14 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையத்தில் சார்பில் வழங்கப்படும் பயிற்சியில் தகுதியுடைய மாணவர்களுக்கு பயிற்ச்சியின் போது மாத சம்பளமாக ரூ.10,500/- வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி – பாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை !

2024 – 2025 தொழில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்படிவத்தினை சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையத்தில் இலவசமாக பெறலாம் அல்லது www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்படிவத்தினை முறையாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பித்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம்,

முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ஐஸ் ஹவுஸ்,

ராயப்பேட்டை, சென்னை – 14

மேலே கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பத்தினை நேரடியாக சமர்ப்பித்து 01.06.2024 முதல் சேர்க்கையினை பெறலாம்.

மாணவர் சேர்க்கைக்கான கட்சி நாள் : 31.08.2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *