
சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்: கன்னியாகுமரியைச் சேர்ந்த வினிஷா(24) என்பவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வரும் நிலையில், தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் செல்வமணி (29) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்து;வந்துள்ளனர். இதற்கிடையில் அவர்கள் நெருக்கமாக பழகியதால் வினிஷா 7 மாதம் கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

உடனே அவர் தனக்கு தானே பிரசவம் செய்ய முடிவெடுத்து பாத் ரூமுக்குள் சென்றுள்ளார். அப்போது அவருக்கு குழந்தையின் கால்கள் தட்டு பட்டுள்ளது. உடனே அக்குழந்தையின் கால்களை பிடித்து இழுக்க தொடங்கிய நிலையில், அப்போது சிசுவின் கால்கள் பிய்த்துக்கொண்டு தனியே வர, குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு வினிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அறிவித்த நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.