சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு பணிமனைக்கு சென்ற போது ரயில் ஒன்று தடம் புரண்டது. கிட்டத்தட்ட ரயில் பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. தற்போது அந்த வகையில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது. அதாவது சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இருக்கும் சாணி குளம் என்ற பகுதியில் காலியாக ரயில் ஒன்று சரியாக நள்ளிரவு ஒரு மணி அளவில் சென்று கொண்டிருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த சமயம் எதிர்பாராத விதமாக இந்த ரயிலின் எஞ்சின் பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகி கீழே இறங்கி தடம் புரண்டது. இந்த ரயில் காலியாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், ரயிலை தண்டவாளத்தில் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.