தற்போது சென்னை ரூட்டு தல விவகாரம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, இதனை தொடர்ந்து கல்லூரிக்கு 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ரூட்டு தல விவகாரம் மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கைது நடவடிக்கை :
இந்நிலையில் மாணவர் சுந்தர் தாக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் காவல்துறை விசாரணையில் ரூட்டு தல விவகாரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர் உயிரிழப்பு :
இந்நிலையில் இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். chennai Route Thala issue presidency college student sundar passed away today
இதனை தொடர்ந்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பச்சையப்பன் கல்லூரி,
சென்னை மாநில கல்லூரி மற்றும் கல்லூரிக்கு வரும் மின்சார ரயில் வழித்தடங்கள் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வு வங்கி ஆளுநர் அறிவிப்பு !
மாநில கல்லூரிக்கு விடுமுறை :
அந்த வகையில் ரூட்டு தல விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் வரும் திங்கட்கிழமை வரை மாநில கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள் :
சென்னையில் குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம்
அரியலூரில் அமையும் Free Trend காலனி தொழிற்சாலை
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு – யாருக்கு தெரியுமா ?
மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக காமெடி நடிகர் – TTF வாசனுக்கு சோதனை!
ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா – வெளியான முழு தகவல் !