சென்னையில் (18.10.2024) இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும்: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் (18.10.2024) இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும்
நேற்று முழுவதும் மழை பெய்யாத நிலையில் தற்போது இன்று அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நுங்கம்பாக்கம், தி.நகர் மற்றும் வடபழனி உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
அதேபோல் குரோம்பேட்டை, தாம்பரம், சோலையூர் மற்றும் பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் மழை விடாமல் பொலிந்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.
நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் – ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!
இந்நிலையில் சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதை கேட்ட மாணவர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?