சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்” : முக ஸ்டாலின் தலைமயிலான திமுக1 ஆட்சியானது மக்களின் நல்வாழ்வுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த மக்களவை2 தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதற்கிடையில் நடந்த சட்டசபையில் மு க ஸ்டாலின்3 “மெகா விளையாட்டு நகரம்” குறித்து அறிவித்திருந்தார். அதன்படி தற்போது சென்னையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் கிட்டத்தட்ட 105 ஏக்கர் பரப்பளவில் “மெகா விளையாட்டு நகரம்” அமைய இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த நகரில், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், நீச்சல் வளாகம், ஹாக்கி ஸ்டேடியம், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமைய இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள் மற்றும் தங்கும் அறைகள், அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கான தங்கும் குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் என அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைய உள்ளது. இந்நிலையில் தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்ய CMDA டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்” – cm stalin news – tamilnadu news – mega sports city – mega vilaiyattu nagaram
பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்? பொண்ணு யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா?
சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு