சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம். தற்போது தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தற்போது வெயிலின் தாக்கமானது முன்பு இல்லாத அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது. முன்பு எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.
சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இதனால் தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் சில இடத்தில் அனல் காற்று வீசாத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் வெளியே வருவதற்க்கே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அதிகப்படியான மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். மேலும் கோடை வெளியில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள மோர், இளநீர், பதநீர், நுங்கு போன்றவற்றை பருகி வருகின்றனர். மேலும் சில இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு மக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.
பசுமை பந்தல் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம் :
மேலும் இந்த அக்னிநட்சத்திர வெளியில் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை தடுக்கும் வகையில் வெளியிலின் தாக்கம் அதிகம் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கும் பணி பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
டி 20 உலக கோப்பை 2024 குரூப் லிஸ்ட் வெளியீடு? இந்தியா எந்த குரூப்ல இருக்கு தெரியுமா?
அந்த வகையில் கோடை வெளியிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி சாலைகளில் அமைந்துள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 10 பகுதிகளில் 6 மீட்டர் நீளத்தில் மற்றும் 5.5 மீட்டர் உயரம் கொண்ட பசுமை பந்தல்களை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.