சென்னையில் கொண்டுவரப்படவுள்ள புதிய போக்குவரத்து நடைமுறை: தமிழகத்தில் தொடர்ந்து மாசு ஏற்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக ஹாரன் மூலம் ஒலி மாசு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் அருகே ஹாரன் மூலம் ஒலி மாசு ஏற்படுவதை தடுக்க, போலீசார் புதிய திட்டத்தை அமல்படுத்த இருக்கின்றனர்.
சென்னையில் கொண்டுவரப்படவுள்ள புதிய போக்குவரத்து நடைமுறை
அதாவது சென்னையில் இருக்கும் ஒவ்வொரு போக்குவரத்து சிக்னல்களிலும் வாகனங்களின் ஹாரன் ஒலியை அளவிடும் விதமாக டெசிமல் மீட்டர்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே வாகன ஓட்டிகள் சிக்னல்களில் நிற்கும் போது தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே இருந்தால் அதன் மூலம் ஏற்படும் ஒலி மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட தாண்டினால், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை முதலில் தமிழகத்தில் உள்ள சென்னையில் தான் அமல்படுத்த இருக்கிறது. chennai signal traffic horn
Also Read: TNPSC குரூப் 2 எழுத போகும் தேர்வர்களே? வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!!
இதற்காக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரையின் பேரில் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து காவலர்களுக்கு வாகனங்களில் ஒலி அளவு அதிகமாக இருப்பதை கண்டு பிடிப்பதற்கு இயர் பிளக் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை