Home » செய்திகள் » தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு – எவ்வளவு தொகை தெரியுமா ?

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு – எவ்வளவு தொகை தெரியுமா ?

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு - எவ்வளவு தொகை தெரியுமா ?

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு, இதன் அடிப்படையில் தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏலத்தை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. chennai theevu thidal firecracker shops Tender announcement 2024

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தற்போது சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏலத்தை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க விரும்பும்தொழில் முனைவோர் நாளை மாலை 2 மணிக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாலை 3 மணிக்கு ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் ஏ பிரிவில் உள்ள 1 – 8 கடைகள் வரை அமைக்க ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 2,25 லட்சமும், இதனையடுத்து பி பிரிவில் 9 – 24 வரை 17கடைகள் அமைக்க தலா ரூ. 4 லட்சமும்,

மேலும் சி பிரிவில் 26 – 38 வரை 15 கடைகள் அமைக்க தலா ரூ. 5.60 லட்சமும், அதன் பிறகு டி பிரிவில் 42 – 50 வரை 10 கடைகள் அமைக்க தலா ரூ. 3 லட்சமும் குறைந்தபட்ச வாடகையாக தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தீவுத்திடலில் பட்டாசு கடைகள் ஏலம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top