சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து – பதற்றத்தில் பயணிகள்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. சொல்ல போனால் ஒரு கார் மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை முதல் மேற்கண்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை காலை வரை மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் மக்கள் யாரும் தங்களது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ள நிலையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்தது. மேலும் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் துபாய்க்கு வந்த கிட்டத்தட்ட 100 விமானங்களை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னையில் இருந்து துபாய் மற்றும் சார்ஜா செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.