தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதியர்கள் போராட்டம் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. annamalai university chidambaram
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதியர்கள் போராட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் :
தமிழ்நாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தற்போது தொகுப்பூதியம் அடிப்படையில் 202 பேர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து சுமார் 14 ஆண்டுகளாக ரூ.4 ஆயிரம் ஊதியத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள் தற்போது வரை பணியாற்றி வருகின்றனர்.
இதன் காரணமாக பணி நிரந்தம் செய்யக்கோரியும், ஊதியத்தை உயர்த்தி தர கோரியும் பல்வேறு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தொகுப்பூதியர்கள் சங்கம் போராட்டம் :
இந்த நிலையில் திங்கள்கிழமை பணி நிரந்தரம் கோரி நிர்வாண போராட்டம் நடத்தப் போவதாக தொகுப்பூதியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் பாதுகாப்பிற்குக் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் தொகுப்பூதியர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது தொகுப்பூதியர்கள் சங்க பிரதிநிதிகள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. annamalai university
தமிழக வாக்காளர்களே ரெடியா இருங்க… வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
துணைவேந்தர் அறிக்கை :
இந்த தொகுப்பூதியர்கள் போராட்ட சம்பவம் தொடர்பாக துணைவேந்தர் அளித்த பதில்அறிக்கையில், தொகுப்பூதிய பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோரிக்கைள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளபடலாம் எனத் தெரிவித்தார். பின்னர் தொகுப்பூதியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த அண்ணாமலை நகர் போலீசார் அவர்களை வெளியேற்றி அனுப்பி வைத்தனர்.