சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான் - 50  மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - போலீஸ் விசாரணை!சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான் - 50  மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - போலீஸ் விசாரணை!

தமிழகத்தின் முக்கிய மாவட்டமான சிதம்பரம் அரசு பள்ளி மதிய உணவில் இருந்த பூரான்: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு.

இப்படி இருக்கையில் சிதம்பரம் அருகே உள்ள வரகூர் பேட்டை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது,  மேலே கூறப்பட்டுள்ள பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளி சத்துணவு கூடத்தில் மதிய உணவை சாப்பிட்டுள்ளனர்.

அப்போது உணவு பாத்திரத்தில் பூரான் ஒன்று செத்துக் கிடப்பதை பார்த்த சத்துணவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனே மாணவர்களை சாப்பிடுவதை தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும் சிலர் மாணவர்கள் சாப்பிட்டு முடித்து விட்டனர். மேலும் சாப்பிடாத மாணவர்களை உணவு அருந்த வேண்டாம் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து உணவு அருந்திய சில மாணவர்களுக்கு லேசான மயக்கமும், தலை சுற்றலும் ஏற்பட்டுள்ளது.

Also Read: சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – பயணிகள் அலறியடித்து ஓட்டம்  – அடையாறு அருகே பரபரப்பு!!

உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாணவர்களை அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் போலீசார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *