தமிழகத்தில் உள்ள ஏகப்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. அதில் மிகவும் பிரபலமான கோவில் தான் தில்லை நடராஜர் கோயில்.
தலத்தின் பெயர்: தில்லை நடராஜர் கோயில் (சிவதலம்)
அமைவிடம் : தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரம் என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த சிவதலம். மிகவும் பிரசித்தி பெற்ற தலம் ஆகும்.
இறைவன் : திருமூலநாதர்
இறைவி : உமையம்மை.
Join WhatsApp Get Astrology Update
தலப்பெருமை:
தரிசிக்க முக்தி தரும் திருத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் திருத்தலம். அம்பாள் இச்சா சக்தி, ஞான சக்தியாக காட்சி தரும் திருத்தலம். நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் திருத்தலம், சமயக் குரவர் எனப் போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக வந்து தரிசித்த திருத்தலம். சிதம்பரம் சைவர்களுக்கு கோவில் என்றாலே சிதம்பரத்தை தான் குறிக்கும். தில்லை என்றும் பெயருண்டு. பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் திருத்தலம். பூலோகக் கயிலாயம் என்பர். இங்குள்ள நடராஜர் உலக இந்துக்கள் மனதில் உன்னத இடம் பெற்றவர்.
தேவாரப் பாடல்களால் போற்றப் பெற்றது. திருவாசகத்தால் புகழப்பெற்றது. சேக்கிழார் தன் பெரிய புராணத்தை இத்தலத்தில் தான் அரங்கேற்றினார். சிற்சபை, கனகசபை, நிருத்த சபை, தேவ சபை, ராஜா சபை என்னும் பஞ்ச சபைகள் கொண்ட பிரம்மாண்டமான ஆலயம்.
சிவராத்திரி 2025 தேதி மற்றும் நேரம் – கதை, தோத்திரம், பலன்
தீர்த்தம்: சிவகங்கை
தல மரம்: தில்லை மரம்.
திருநாவுக்கரசர் – மேற்கு வாயில்
ஞானசம்பந்தர் – தெற்கு வாயில்
சுந்தரர் – வடக்கு வாயில்
மாணிக்கவாசகர் – கிழக்கு வாயில்.
தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் !
குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள் ! தமிழகத்தில் உள்ள முக்கிய சரஸ்வதி கோவில்கள் !
மதுரையிலேயே உள்ள பஞ்சபூத தலங்கள், எங்கெங்கு உள்ளது வாங்க பாக்கலாம் !
ருத்ராட்சம் மாலை பயன்கள் ! ஏக முகம் முதல் 14ம் முகம் வரை தரும் நன்மைகள் எத்தனை தெரியுமா ?
திருப்பதி மொட்டை: நாம் செலுத்தும் முடி காணிக்கை என்னவாகிறது தெரியுமா?
மதுரை காலதேவி அம்மன் கோவில் – கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் அதிசயம் !