மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வாக்காளர்களே – பூத் சிலீப் இல்லனாலும் வாக்களிக்கலாம்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்குப் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன கொண்டு வரவேண்டும் என்றும், வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி வேறு ஆவணங்கள் வைத்து வாக்குப்பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) சென்னை தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” நடக்க இருக்கும் தேர்தலில் பூத் சிலீப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வருகிற ஏப்ரல் 19ல் விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர்கள் நலத்துறை நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார்.