தேர்தல் நடத்தை விதிகள் நாளை வரை அமலில் இருக்கும். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அந்த வகையில் நேற்று இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தேர்தல் நடத்தை விதிகள் :
தற்போது உள்ள 17 வது நாடாளுமன்ற மக்களவைக்கான காலம் வருகிற ஜூன்16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி முடிவடைந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிமுறைகள் எப்போதிருந்து விளக்கிக்கொள்ளப்படும் என்று அனைவரது மத்தியில் இருந்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
மாநில அந்தஸ்து பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – தேர்தல் ஆணையம் அங்கீகாரம் !
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு நாளை வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு அதன் பிறகு விலக்கிக் கொள்ளப்படும் என்றும் கூறினார்.
.