தற்போது அமெரிக்காவில் முதல் நாளில் ரூ.900 கோடி முதலீடுகள் ஈர்ப்பு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தின் வழியாக தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முதல் நாளில் ரூ.900 கோடி முதலீடுகள் ஈர்ப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் :
தமிழ்நாட்டிற்கு தேவையான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அந்த வகையில் சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனை தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அத்துடன் திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும், அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்ப்பு :
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சான்பிரான்சிஸ்கோவில் ஒரே நாளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிகளவு முதலீடுகள் கிடைத்துள்ளன.
அந்த வகையில் அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி – அண்ணாமலை லண்டன் சென்றதையடுத்து தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவிப்பு !
மேலும் இது சென்னை, மதுரை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட நகரங்களில் 4,100 வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுக்கும்.
அதுமட்டுமல்லாமல் இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் முதலீட்டை ஈர்க்கும் வேகம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.
இதனையடுத்து அமெரிக்காவில் இருந்து மேலும் அதிக முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்படும். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் அமையும் Nokia & Paypal நிறுவனம்
மதுரையில் ரூ 50 கோடி முதலீட்டில் INFINX ஐடி நிறுவனம்
கோவையில் ரூ 150 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை