ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின் - பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின் - பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

Breaking News: ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) என்பவரை கடந்த 5ம் தேதி மாலை நேரத்தில் மர்ம கும்பலால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

மேலும் பல்வேறு கட்சியினர் அவரின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கும் விதமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து அவரின் உடல் நேற்று  உடல் புத்த மத படி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் சினிமா பிரபலங்களும் அவரை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – குழந்தை உட்பட 27 பேர் பலி!!

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்ல இருக்கிறார். அதாவது அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *