இந்தியாவின் சார்பில் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி யில் உயரம் தாண்டுதலில் வெற்றி பெற்ற மாரியப்பன் தங்கவேலு முதல்வர் ஸ்டாலின் பரிசுத்தொகையை வழங்கினார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி :
ஜப்பான் நாட்டின் கோபே நகரில் மாற்றுத் திறனாளிகள் பங்குபெறும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த பாரா சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரத்தை தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.உலக பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 2024 – திமுக வேட்பாளரை அறிவித்த முதல்வர் முக ஸ்டாலின்!!
ரூ.75 லட்சம் பரிசு :
இதனையடுத்து உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.