இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின். கடந்த சில நாட்களுக்கு முன் போதை பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த அதிகாரிகள் இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி அவதூறு பரப்புவதாக மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இபிஎஸ் மீது ஸ்டாலின் வழக்கு :
இபிஎஸ் மற்றும் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தை கையிலெடுத்த எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக திமுகவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வருகை ! 3000 திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு – கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் !
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக இபிஎஸ் மற்றும் அண்ணாமலை மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.