Breaking News: குழந்தை திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை: சமீப காலமாக குழந்தை திருமணம் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை விடுத்தது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ” முந்தைய காலத்தில் குறைந்த வயதுடைய பெண்களுக்கு திருமணம் வைக்கப்பட்டது.
குழந்தை திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை
தற்போது பெண்கள் எல்லா இடத்திலும் சிறப்பாக இருந்து வருகின்றனர். மேலும் திருமண தடைச் சட்டம் 2006 ன்படி, 8 வயது நிறைவடையாத பெண்ணுக்கும். 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் கல்யாணம் நடத்த கூடாது. ஆனால் அவ்வாறு நடைபெறுவதாக சில புகார்கள் எழுந்து வருகின்றனர்.
18 வயது நிரம்பாத பெண் குழந்தையை கல்யாணம் செய்த போதிலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டாலும் அந்நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
Also Read: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் – டெல்லி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மேலும் குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ அல்லது அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்று யாரேனும் புகார் கொடுத்தால் உடனடியாக குழந்தையை மீட்டு குழந்தைகள் நல குழு மத்தியில் ஒப்படைக்கப்படும். எனவே குழந்தை திருமணம் தொடர்பாக 1098 மற்றும் 181 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஐகடே இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024: இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது
தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறை
தமிழ்நாட்டில் நாளை (12.07.2024) மின்தடை பகுதிகள்