சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 20 ஆண்டுகளாக மூக்கில் பகடைக்காய் (டைஸ்) இருந்த நிலையில் தற்போது தான் அது கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, ” சீனாவை சேர்ந்த 23 வயது சியோமா என்ற இளைஞருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து தும்மல், சளி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
20 ஆண்டுகளாக மூக்கில் இருந்த டைஸ் – 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை!
இதனை தொடர்ந்து அந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது தான் அவருக்கு, அந்த இளைஞரின் மூக்கிற்குள் பகடைக்காய் இருந்தது தெரிய வந்தது. அதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சியோமோ சிறு வயதில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது, தெரியாமல் பகடைக்காயை அவருடைய மூக்கில் நுழைத்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
விஜய் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு செய்யும் அஜித்? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!
தற்போது அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டதாக தெரிகிறது. தற்போது அவருக்கு கிட்டத்தட்ட 23 வயதில் இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்த பகடைக்காய் அவரின் மூச்சுக் குழாயில் இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த பகடைக்காய் சிதைந்து காணப்பட்டதாகவும், குறிப்பாக அந்த டிரஸ் 2 cm நீளத்தில் இருந்ததாகவும், அதை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றியதாகவும் தெரிகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்