செல்போன் டவர்கள் இல்லாமல் செயற்கைகோள் மூலம் போன் பேசலாம் என்பதை கண்டு பிடித்து சீனா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
செல்போன் டவர்கள் செயற்கைகோள் மூலம் போன்களை இயக்கும் சோதனை வெற்றி
உலகில் உள்ள பல நாடுகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசமான கண்டு பிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக சீன அரசு செல்போன் டவர் இல்லாமல் வெறும் செயற்கைக்கோள் உதவியுடன் ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் இது குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2016ம் ஆண்டு டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி வைத்தது. அப்போது இருந்து செயற்கைக்கோள் மூலமாக போன் பேசுவதற்கான ஆய்வை மேற்கொண்டு வந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தற்போது அதை செய்து சாதித்தும் காட்டியுள்ளது. எனவே இந்த செயற்கை கோளை பயன்படுத்தி, ஆசியா – பசிபிக் பிராந்தியம் முழுவதும் போன் பேசலாம் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தரையில் உள்கட்டமைப்பு ஏதுமின்றி வெறும் செயற்கை கோள் மூலம் போன் பேசுவதால், இயற்கை சீற்றங்கள் வந்தாலும் கூட, அதாவது சுனாமி, நிலநடுக்கம் போன்றவை வந்தாலும் கூட எந்த தடையும் இன்றி போன் பேசி கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்