தன்னை விட 50 வயது அதிகமான ஓவியரை திருமணம் செய்த பிரபல மாடல் அழகி - புகைப்படம் வைரல்!தன்னை விட 50 வயது அதிகமான ஓவியரை திருமணம் செய்த பிரபல மாடல் அழகி - புகைப்படம் வைரல்!

மாடல் அழகி ஒருவர்  85 வயது கோடீஸ்வரரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சோசியல் மீடியாவில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

சீனாவை சேர்ந்த பிரபல ஓவியராக விளங்கி வருபவர் தான் பேன் ஜெங் (85). இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மேலும் அவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் ஆகியுள்ள நிலையில் தற்போது 85 வயதில் நான்காவது முறையாக திருமணம் செய்துள்ளார். அதாவது கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சீனா இன்டர்நேஷனல் போட்டியில் 4-வது இடத்தை பிடித்த மாடல் அழகியான சூ மெங் (35) என்பவரை தான் அவர் 4வது திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த திருமண செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

மேலும் சீனாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் பேன் ஜெங் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டார். மேலும் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஓவியம் வரைவதை போன்ற ஒரு படத்தையும், இளம்பெண் அதனை பார்ப்பது போன்ற படத்தையும் இணையத்தில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் “எனது மனைவி சூ மெங்கின் உன்னிப்பான கவனிப்பும், அவரின் பாசப்பிணைப்பும் தான் என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முழுமையாக மீட்டெடுக்க உதவியது” என்று குறிப்பிட்டிருந்தார்.  

என்னது – மழலையர் பள்ளி கட்டணம் ரூ.4 லட்சமா?  பில்லை பகிர்ந்து வேதனை தெரிவித்த தந்தை – நெட்டிசன்கள் ஷாக்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *