சித்தா திரைப்படம் முழு விமர்சனம். சித்தார்த் நடிப்பில் ” சித்தா ” திரைப்படம் வருகின்ற 28 செப்டம்பர் அன்று திரையில் வெளியாக இருக்கின்றது. சித்தா திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கும் கதைக்களத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. சித்தா படத்தின் கதை என்ன என்பதை காணலாம்.
சித்தா திரைப்படம் முழு விமர்சனம் ! பாய்ஸ் படத்தில் வரும் முன்னாவாக மாறிய சித்தார்த் !
” சித்தா ” படக்குழு :
சித்தா திரைப்படத்தினை ‘ சேதுபதி ‘ திரைப்படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கி இருக்கின்றார். சித்தார்த் , நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் திரைப்படத்திற்கு இசை அமைத்து இருக்கின்றார். Red Giant நிறுவனம் திரைப்படத்தினை வெளியிடுகின்றது. மேலும் சித்தார்த் தன் சொந்த தயாரிப்பில் திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
பொருள் என்ன- சித்தா :
தாய் , தந்தை மற்றும் குழந்தைகளுடன் வாழ்வது ஒரு குடும்பம் என்று சொல்லுவோம். குழந்தைகள் தந்தையின் தம்பியை சித்தப்பா என்று அழைப்பர். இந்த சித்தப்பாவின் பெயர் சுருக்கமே ‘ சித்தா ‘ ஆகும்.
திரைக்கதை
திரைப்படத்தின் நாயகனாக சித்தார்த் நடித்து உள்ளார். படத்தில் சித்தார்த் அண்ணன் இறந்து விடுகின்றார். இவருக்கு எட்டு வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது. எனவே குழந்தை , அண்ணி , சித்தார்த் மூவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். குழந்தை மேல் சித்தார்த் உயிராய் இருக்கின்றார். சித்தார்த் நண்பனுக்கு எட்டு வயதில் குழந்தை இருக்கின்றது. இந்த இரண்டு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படித்து நண்பர்களாக பழகி வருகின்றனர்.
சந்திரமுகி 2 கதை இது தான் ! OTT வெளியீடு தேதி அறிவிப்பு !
சிறையில் சித்தார்த் :
ஒரு நாள் நண்பனின் குழந்தை பள்ளி முடிந்து வந்தவுடன் உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகின்றது. மருத்துவமனையில் சேர்த்த பின் தான் தெரிகின்றது குழந்தை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இருப்பது. இதற்க்கு சித்தார்த் தான் காரணம் என்று தெரிய வருகின்றது. இதனால் சித்தார்த் போக்ஸோ சட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார். தன் மீது தவறு ஏதும் இல்லை என்று உடைத்தெறிந்து சிறையில் இருந்து வெளியே வருவது தான் திரைப்படத்தின் இறுதி கதை.
கதை எப்படி இருக்கின்றது :
1. கதையை இழுத்துக்கொண்டு போகாமல் ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக சொல்லப்பட்டு உள்ளது.
2. கதையின் முக்கிய கட்டத்தில் கருத்தை எதார்த்தமாக சொல்லி இருக்கின்றனர். இன்னும் ஆழமாக சொல்லி இருக்கலாம்.
3. படத்தில் சில குறைகள் தென்படலாம். ஆனால் எடுத்த கதையை மக்களுக்கு தெளிவாக சொல்லி இருக்கின்றனர்.
4. சித்தா படத்தின் கதைக்கு ஏற்ற நடிகர் , நடிகைகள் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் தேர்வு சரியாக அமைந்துள்ளது.
5. குழந்தைகள் வன்முறையை அனைவரும் புரிந்து கொள்ளும் படி திரைப்படம் வந்துள்ளது.
பிரபலங்கள் கருத்து :
சித்தார்த் :
திரைப்படத்தின் நாயகன் சித்தார்த் ‘ சித்தா ‘ படத்தினை குறித்து கூறியதாவது, குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம். பாய்ஸ் படத்தின் முன்னா கதாப்பாத்திரம் தற்போது வரையில் பேசப்படுகின்றது. அதேபோல் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு சித்தா கதாப்பாத்திரம் ரசிகர்களால் ரசிக்கும் படி இருக்கும் என்று கூறி உள்ளார்.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்த்திட இங்கே கிளிக் செய்யவும்
கமல் :
திரைப்படத்தில் பல புதுமுகங்கள் அறிமுகம் இருக்கின்றது. அவர்கள் திரைப்படத்தில் நடித்த விதமும் அவர்களை கையாண்ட விதம் அருமையாக இருக்கின்றது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பிக் பாஸ் – ராஜு :
சித்தா திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டுய படம் என்பதை கடந்து ஆண்கள் அனைவரும் பார்க்க வேண்டும் திரைப்படம் என்று பிக் பாஸ் வெற்றியாளர் ராஜு கூறி உள்ளார்.
நீலிமா ராணி :
நாம் வாழும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனையை திரைப்படத்தில் காட்டி இருக்கின்றனர். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று நடிகை நீலிமா ராணி கூறி இருக்கின்றார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் :
இந்த வருடத்தில் வெற்றி அடைய வேண்டிய திரைப்படம். பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை சித்தா படம் கூறுகின்றது. குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் பார்க்க வேண்டிய படம் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி உள்ளார்.
குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் வீடுகளில் குழந்தைகள் வன்முறை பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அறிவுரைகள் கேட்டும் போது குழந்தைகள் பெரிதாய் எடுத்துக்கொள்வது இல்லை. திரைப்படங்கள் மூலம் குழந்தைகளுக்கு சொல்லும் போது அவைகள் எளிதில் புரியும். அதன் படியான உணர்வுபூர்வமான கதையாக சித்தா எடுக்கப்பட்டு உள்ளது. வார இறுதியை தியேட்டரில் கொண்டாடும் பலருக்கு சித்தா திரைப்படம் ஒரு புதுமையான கதையாக இருக்கும்.