தேங்காய், தக்காளி, புதினா மாதிரி சவ் சவ் காய் சட்னி செஞ்சு பாருங்க. ஒரே மாதிரியான உணவு முறை நம்மை போர் அடிக்க செய்துவிடும். இப்படி சட்னியிலாவது மாற்றம் செய்து பார்க்கலாம்.
சவ் சவ் காய் சட்னி
தேவையானவை :
சவ்-சவ் காய் – 2,உளுந்தம் பருப்பு – 3 ஸ்பூன்,குழம்பு கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்,6 பல்பூண்டு,வற்றல் -7
புளி தேவையான அளவு ,கறிவேப்பிலை தேவையான அளவு,பெருங்காயத்தூள்,நல்லெண்ணேய்
செய்முறை விளக்கம் :
சவ்-சவ் காய் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளா நறுக்கி கொள்ளவேண்டும்.
பின் வாணலியில் நல்லெண்ணேய் சேர்த்து உளுந்தம்ப்பருப்பு , குழம்பு கடலை பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும் .
அடுத்து பூண்டு,வற்றல்,புளி,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து தனியே எடுத்துக்கொள்ளவேண்டும் . அதனுடன் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து ஆற விட வேண்டும். chow chow vegetable chutney recipe.
பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் – எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தம் தெரியுமா ?
பின் வாணலியில் நல்லெண்ணேய் சேர்த்து நறுக்கிய சவ்-சவ் காய்யினை தண்ணிர் சேர்க்காமல் நன்கு வதக்க வேண்டும்,அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
காய் நன்கு வதங்கிய உடன் ஆற விட வேண்டும்.
முதலில் ஆற வைத்த உளுந்தம்ப்பருப்பு, கடலைப்பருப்பு, பூண்டு, வற்றல், புளி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் கலந்த கலவையை முதலில் மிக்சியில் அரைக்க வேண்டும் அதனுடன் ஆற வைத்த சவ்-சவ் காய்யினை அரைக்க வேண்டும்.
அரைத்த கலவையை ஒரு கிண்ணத்தில் சேர்த்து சிறு வாணலியில் எண்ணெய் ,கடுகு,சீரகம் ,கறிவேப்பிலை தாளித்து சேர்க்க சட்னி தயார்.
பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்?
பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பாகற்காய் ஜூஸில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? என்னென்ன
சோம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மை கிடைக்குமா ? – முழு தகவல்
HUID ஹால்மார்க் தங்கம் தான் நீங்க வாங்குறீங்களா ! போலி முத்திரையை எப்படி கண்டுபிடிக்கலாம் ?