சினிமா திரையரங்குகள் மே 17ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல்: தற்போதைய சினிமா உலகில் பெரும்பாலான மக்கள் புது படங்களை தியேட்டரில் கண்டுகளிக்க தான் நினைக்கிறார்கள். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் படங்கள் வெளியாவதை விட புதுப்புது ஓடிடி நிறுவனங்கள் தொடங்குவது தான் அதிகமாகி விட்டது. இதனால் தியேட்டருக்கு வரும் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இன்னும் தெளிவாக சொல்ல போனால், பெரிய பட்ஜெட் படங்களை பார்ப்பதற்கு அதிகமாக கூட்டம் சேர்கிறது. குறிப்பாக விஜய், ரஜினி, அஜித், கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் படங்களை மட்டுமே தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி சிறிய பட்ஜெட் படங்களில் சிலவற்றையே ரசிகர்களின் மனதை வெற்றி பெறுகிறது. இந்நிலையில் தெலுங்கானா தனித் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் தனி திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகததாலும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு கூட்டம் வரவில்லை என்பதால் தனித் திரையரங்கு உரிமையாளர்கள் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சினிமா திரையரங்குகள் மே 17ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல்