சென்னையில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதனை போல் சென்னை மெட்ரோ ரயில் ரயில் அனைத்து வழித்தடங்களிலும் காலை 5 முதல் இரவு 11 மணி வரை வழக்கம் போல் செயல்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. city buses metro trains in Chennai will run as usual
சென்னையில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
காற்றழுத்த தாழ்வுப் பகுதி :
தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
மேலும் இது சென்னைக்குக் கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. Transport Corporation Announcement
அத்துடன் இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்துகள் இயக்கம் :
சென்னையில் இன்று மாநகர பேருந்துகள் வழக்கம்போல் செயல்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கன மழையால் சென்னையில் நேற்று பல இடங்களில் பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்ட நிலையில்,
இன்று அனைத்து தடங்களிலும் மாநகர பேருந்துகள் குறித்த நேரத்திற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர பேருந்து இயக்கம் நேற்று குறைக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் மக்கள் நேற்று சிரமப்பட்டனர்.
இந்நிலையில், இன்று முழுமையாக பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. city buses metro trains in Chennai will run as usual – Transport Corporation Announcement
அம்மா உணவகங்களில் இலவச உணவு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !
அதனை போல் சென்னை மெட்ரோ ரயில் ரயில் அனைத்து வழித்தடங்களிலும் காலை 5 முதல் இரவு 11 மணி வரை வழக்கம் போல் செயல்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.