டாப் 3 திரைப்படங்கள்
பொதுவாக சினிமாவை பற்றி நாம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. சொல்ல போனால் படத்திற்கு மிக முக்கியமாக கருதப்படுவது என்னவென்றால் படத்தோட கிளைமாக்ஸ் தான். படத்தில் பர்ஸ்ட் ஆப் நன்றாக இருப்பினும் கிளைமாக்ஸ் சுமாராக இருந்தால் கண்டிப்பாக படம் ஓடாது பிளாப் ஆகி விடும். அதனாலேயே இயக்குனர்கள் கிளைமாக்ஸ் சீனை பார்த்து பக்குவமாக எடுப்பார்கள். ஏன் படம் முழுவதும் முடித்து விட்டு படம் ரிலீஸ் ஆன பிறகு கூட, கிளைமாக்ஸ் சீன்கள் மாற்றியது உண்டு. அதாவது படம் வெளியாகி இரண்டு நாட்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் கிளைமாக்ஸை உடனுக்குடன் மாற்றி ரிலீஸ் செய்துள்ளனர். இதில் விஜய், அஜித் படங்களும் அடங்கும். அவை எந்தெந்த படங்கள் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ப்ரியமுடன்:
90ஸ் காலகட்டத்தில் விஜய்க்கு பெரிதும் கை கொடுத்த கதைகள் என்றால் காதல் கதைகள் தான். அப்போது அவர் நடித்த அனைத்து காதல் படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்தது. அதில் ஒரு திரைப்படம் தான் ப்ரியமுடன். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் முதலில் காதலியை திருமணம் செய்வது போல் படமாக்கப்பட்டது. அதன் பிறகு ஹீரோ பல தவறுகள் செய்து போலீஸ் ஒன்னும் செய்யவில்லையா?, என்று லாஜிக் இடித்ததால், அவர் செய்த தவறுக்காக போலீஸ் அவரை சுட்டுக் கொல்வது போல் மாற்றப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மின்சார கனவு:
பிரபு தேவா, அரவிந்த்சாமி மற்றும் கஜோல் ஆகியோர் நடிப்பில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஏன் சொல்லப்போனால் ஒரு வாரத்திற்கு பிறகு தியேட்டரில் யாரும் எட்டி கூட பார்க்க வில்லையாம். அதற்கு காரணம் படத்தோட கிளைமாக்ஸ் மக்களுக்கு பிடிக்கவில்லையாம். அதாவது படத்தின் முடிவில் பிரபு தேவாவை கல்யாணம் செய்து கொள்ளாமல் கஜோல் கன்னியாஸ்திரி ஆக மாறியது போல் கிளைமாக்ஸ் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஒரு வாரத்திற்கு பிறகு கஜோல் பிரபுதேவா-வை கல்யாணம் செய்து கொள்வது போலவும், அரவிந்த்சாமி பாதிரியார் ஆகிவிடுவது போலவும் கிளைமாக்ஸ் மாற்றப்பட்ட பின் படம் வேற லெவல் ஹிட் அடித்தது.
கிரீடம் :
அஜித் போலீசாக நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். அப்பா மகனுக்கும் இருக்கும் பாசத்தை மையமாக எடுத்த இந்த படத்தில் கிளைமாக்ஸ் சீனில் அஜித் தண்டனைக்காக ஜெயிலுக்கு போவதோடு முடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இது ரசிகர்களுக்கு திருப்தியை தராததால், தண்டனைக்கு பிறகு அஜித் மீண்டும் போலீஸ் ஆனது போல் காட்சி அமைக்கப்பட்டது.