சென்னையில் அமையும் Nokia & Paypal  நிறுவனம் -  இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பா?சென்னையில் அமையும் Nokia & Paypal  நிறுவனம் -  இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பா?

சென்னையில் அமையும் Nokia & Paypal நிறுவனம்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்து  தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் பெரும் படையும் சென்றுள்ளது. அங்கு இருக்கும் தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

சென்னையில் அமையும் Nokia & Paypal நிறுவனம்

இதனை தொடர்ந்து அமெரிக்கா பயணத்தின் முதல் பகுதியாக இன்று சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் முன்னிலையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களுடன் சேர்ந்து முக ஸ்டாலின் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.

அதன்படி தற்போது சென்னையில் உள்ள சிறுசேரியில் ₹450 கோடி முதலீட்டில் “நோக்கியா ஆராய்ச்சி நிறுவனம்” அமைக்க  ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 10 ஜி, 25ஜி, 50 ஜி, 100 ஜி போன்ற சேவை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. CM MK Stalin at San Francisco Investors Conference

Also Read: மதுரையில் ரூ 50 கோடி முதலீட்டில் INFINX ஐடி நிறுவனம் – 700 பேருக்கு வேலை கன்பார்ம் – முதல்வர் ஒப்பந்தம்!

அதே போல் சென்னையில் 1000 பேருக்கு வேலை கிடைக்கும் விதமாக பே பால் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மையம் அமைக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ₹250 கோடி முதலீட்டில் அமைய உள்ள மைக்ரோ சிப் நிறுவனம் மூலம் 1,500 பேருக்கு வேலை கிடைக்கும். இப்படி தொடர்ந்து முதல்வர் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது. Nokia & PayPal

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *