Breaking News: தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்: திமுக கட்சி ஆட்சியை பிடித்ததில் இருந்து பல்வேறு நல்ல திட்டங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டு வருகிறார். குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக புது புது வசதிகளை ஏற்படுத்தி வருகிறார்.
பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்
இதுவரை பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது முதல்வர் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் படிக்க வழி வகுத்துள்ளார். இந்த திட்டம் அரசு பள்ளியில் மட்டும் அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான இன்று காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதல்வர் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
Also Read: அமெரிக்காவில் சிலந்தி கடித்ததால் அழுகிய பெண்ணின் முகம் – அடக்கடவுளே.., இப்படி கூட நடக்குமா?
இதனை தொடர்ந்து பேசிய அவர், ” இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர்களின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு செலவு இல்லை.
இதன் மூலம் எதிர்கால தலைமுறையை உருவாக்குவதே முதலீடு என்று கூறியுள்ளார்.
மேலும் கிட்டத்தட்ட இந்த திட்டத்தின் கீழ் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி பசியோடு எந்த மாணவரும் வகுப்பறையில் அமரக்கூடாது என்று தான் இந்த திட்டத்தை நான் கொண்டு வந்தேன் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
இனி தினந்தோறும் ஒரு முறையாவது சிரிக்க வேண்டும்