முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரம்மாளின் மகனான முரசொலி செல்வம். அவருடைய அண்ணன் முரசொலி மாறன் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர். மேலும் அவருக்கு செல்வி என்ற தங்கை உள்ளார்.
முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம்
செல்வியை தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கல்யாணம் செய்துள்ளார். இப்படி அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் கூட முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முரசொலி செல்வம் பெங்களூரில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது உடல் பெங்களூரில் இருந்து இன்று பிற்பகல் சென்னைக்குக் கொண்டு வர இருப்பதாக கூறப்படுகிறது.
டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா? ரூ.3800 கோடி சாம்ராஜ்யம் கைவசம்?
மேலும் சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் அவருடைய இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இவரின் இறப்புக்கு முதல்வர் முக ஸ்டாலின் முதல் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024
விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 – மவுனம் கலைத்த தமிழக முதல்வர்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!