தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சாதிவாரி கணக்கெடுப்பு :
தமிழ்நாட்டில் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து எந்த அரசு பொறுப்பேற்றாலும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு வெறும் பேசுபொருளாக மட்டுமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது பற்றி பாட்டாளி மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்பட வேண்டும். தற்போது பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வன்னியர்களுக்கான உள்ளீடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி தற்போது நடைபெறும் இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவர உள்ளோம், இதனை பாமக ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் ! அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு, அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் !
பாமக வெளிநடப்பு :
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு தான் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய பதிலில் எங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறி பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.