தற்போது நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீட் தேர்வு :
மருத்துவப்படிப்புகளுக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்தன. அந்த வகையில் நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பல மாநில அரசுகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
சட்டமன்றத்தில் தீர்மானம் :
தற்போது தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசானது நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இந்த தேர்வை எதிர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்க்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை – புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி !
இதனை தொடர்ந்து நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான உரிமையை மாநில அரசிடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு புதிய நீட் விலக்கு மசோதாவை கொண்டுவந்துள்ளது.