சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு. தற்போது கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது.
அத்துடன் இந்த தடுப்பணை கட்ட கேரள அரசின் சார்பாக முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரம் மற்றும் 120 அடி நீளத்தில் தடுப்பணை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால் கரூர், திருப்பூர் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விவசாயத்திற்கான பாசனம் மற்றும் குடிநீர் போன்ற தேவைகளுக்கான நீர் வரத்து குறையும்.
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் :
இதனால் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழ்நாடு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
மேலும் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் இந்த தடுப்பணை விஷயத்தில் தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாத நிலையில், இந்த தடுப்ணை விவகாரத்தை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து அணை கட்ட தடை விதித்ததுடன்,
இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது
இந்நிலையில் சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் காவிரி ஆற்று படுகையில் உள்ள அமராவதி (பம்பாறு) ஆற்றின் துணை படுகையின் ஒரு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வந்தன.
இதன் காரணமாக தமிழகத்தில் அமராவதி ஆற்றின் நீர்வரத்து வெகுவாக குறையும் என தமிழக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே இப்பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணும் வரை, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுமானப் பணியை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.