வெடிகுண்டு மிரட்டல்
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோயம்புத்தூருக்கு வர இருக்கிறார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதற்கு பின்னால் இருக்கும் நபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. அதுமட்டுமின்றி மிரட்டல் விடப்பட்டுள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்த நிலையில் பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து சென்றனர். கோவைக்கு இன்று (மார்ச் 18) மாலை பிரதமர் மோடி வரும் நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.