Breaking News: கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு: கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த 19 வது வார்டு கவுன்சிலர் கல்பனா அவர்களுக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மற்றும் சில மருத்துவ காரணங்களாலோ அவர் தனது மேயர் பதவியை மட்டும் ராஜினாமா செய்தார்.
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
இதனை தொடர்ந்து அவரது இடத்தை நிரப்ப புதிய மேயர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நாளை(ஆக., 6) நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் கடந்த, ஆக., 1ம் தேதி திருச்சியில் நடைபெற்ற விழாக்களுக்கு வருகை தந்த, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, அன்றிரவு ஈரோடு சென்றார்.
அதற்கு அடுத்த நாள் 2ம் தேதி ஈரோட்டில் நடந்த அரசு விழாக்களில் பங்கேற்று அங்கிருந்து அப்படியே கோவை சென்ற அவர், புதிய மேயரை கோவையில் தேர்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா – கண்கலங்க வைத்த சம்பவம்!
எனவே நாளை நடைபெற இருக்கும் மறைமுக தேர்தலில் போட்டி போடும் திமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரங்கநாயகி கோவை மாநகராட்சி 29-வது வார்டு கவுன்சிலர் ஆக இருந்து வருகிறார். மேலும் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை