
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய வழக்கு: மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மேலும் நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய வழக்கு
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று அதுவரை வாக்கு எண்ணிக்கைகளை வெளியிட கூடாது என்றும் ஆஸ்திரேலியாவில் பணியாற்றக்கூடிய கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் வாதடிய போது, ” கடந்த ஜனவரி மாதம் தான் பட்டியல் வரைவு வெளியிடப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
உழைப்பாளர் தினத்தன்று நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – தமிழக அரசு எச்சரிக்கை!!
அதில் மனு தாக்கல் செய்த பெயர் இடம் பெறவில்லை. அவர் அந்த தொகுதியில் வசிக்காமல் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான போது அவருடைய பெயர் விடுபட்டு இருக்கும் போது ஏன் ஆட்சேபனம் தெரிவிக்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி படிவம் 6- ரை ஏன் பயன்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான போதே மனு தாரர் ஆட்சேபனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!