சமீபத்தில் கோவையைச் சேர்ந்த முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா யூடியூப் மூலம் பிரபலமானார். இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்ஸில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்மையில் தி.மு.க எம்.பி.கனிமொழி அவர் சென்ற பேருந்தில் பயணம் செய்த நிலையில், பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவை பணி நீக்கம் செய்தனர். இந்நிலையில் இவர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி சத்தி ரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து காவல்துறை எஸ்.ஐ., ராஜேஸ்வரி பணியில் இருந்து போது, ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனை எஸ்.ஐ., போலீஸ் கேட்டபோது ஷர்மிளா அதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் தவறாக பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.