இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல். தற்போது பழங்கள் மற்றும் உணவுப்பொருள்களில் சுவையை அதிகப்படுத்துவதற்காக அதிகப்படியான ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 55 க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் பழ மண்டிகளில் சோதனை நடத்தினர். அந்த வகையில் கோவை மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.
இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் :
இந்த முறையில் பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க உதவும் எத்திலின் ரசாயன பாக்கெட்டுகளை உரிய முறையில் பயன்படுத்தாமல் மாம்பழங்கள் மீது நேரடியாக படும்படி வைத்திருந்ததை அடுத்து 16,107 கிலோ மாம்பழம் மற்றும் அழுகிய நிலையில் இருந்த 100 கிலோ ஆப்பிள் பழங்கள் ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் – அதிகாரிகள் நடவடிக்கை !
மேலும் இது தொடர்பாக கோவை மாவட்டம் வைசியால் தெரு, பெரிய கடை வீதி, பவழக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 15 பழக்கடைகள் மற்றும் 16 பழ கிடங்குகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.