Breaking News: கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம்: கடந்த ஏப்ரல் மாதம் கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைப்பதற்கு மீட்பு படையினருக்கு மிகப்பெரிய அளவில் பணம் செலவானதாக கணக்கு காட்டப்பட்ட முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
கோவை குப்பை கிடங்கு தீ விபத்து விவகாரம்
அதாவது வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் உரம் தயாரிக்கும் இடம் அருகே கடந்த ஏப்.,6 முதல் ஏப்.,17 வரை தீப்பற்றியது. தொடர்ந்து தீ எரிந்து வருவதால் அதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட விமான படையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து தீயை அணைப்பதற்கான மொத்த செலவு ரூ.76,70,318 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டீ காபி மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் ரூ.27,51,678 செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
Also Read: சென்னையில் 12th மாணவன் ஓட்டிய டியோ பைக் விபத்து – ஒரே நொடியில் போன உயிர்!!
காட்டப்பட்ட செலவின விவரம்:
- உணவு டீ, காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் – ரூ. 27,51,678
- பொக்லைன் மற்றும் லாரி வாடகை – ரூ. 23,48,661
- டீசல், பெட்ரோல், கீரிஸ் ஆயில் – ரூ. 18,29,731
- தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி மற்றும் தனியார் வாகனம்) – ரூ. 5,05,000
- காலணிகள் – ரூ. 52,348
- முகக்கவசம் – ரூ. 1,82,900
- மொத்த செலவு – ரூ. 76,70,318