தற்போது கோவை ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அத்துடன் நிலுவை உள்ள வழக்குகள் மீதான விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஈஷா யோகா மையம் :
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையத்தின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் ஈஷா மீதான குற்றவழக்குகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என ஈஷா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் அவசர வழக்காகக் கடந்த 3ஆம் தேதி (03.10.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், மேலும் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொள்வதாகத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காவல்துறையிடம் இருந்து உயர்நீதிமன்றம் எந்த அறிக்கையைக் கேட்டிருந்ததோ அந்த அறிக்கையை தங்களிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புகார் :
இதனையயடுத்து கடந்த 15 வருடங்களில் ஈஷா மையம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய தகவல்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஈஷா யோகா மையத்தில் சரவணமூர்த்தி என்பவர் மீது பல்வேறு மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையிலே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் என்ற விவரமும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஈஷா யோகா மையத்தில் தகன மேடையும் உள்ளது எனவும் இதை எதிர்த்து பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்துக்கு தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!
உச்சநீதிமன்றம் உத்தரவு :
இந்நிலையில் இந்த வழக்கு (18.10.2024) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து ஈஷா விகாரத்தில் பல வழக்குகள் உள்ளதால் இதனை விசாரிக்க தடை விதிக்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், நிலுவை உள்ள வழக்குகள் மீதான விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும்,
இந்த வழக்கு தொடர்பான தமிழக காவல்துறையின் அறிக்கையை இன்னும் நங்கள் படிக்கவில்லை என கூறி வழக்கு விசாரணையை அக்டோபர் 21ம் தேதி ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.