பரபரப்பு நகரமான கோவை மாவட்டத்தில் LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய மாவட்டமான கோவையில் உள்ள அவிநாசி சாலை மேம்பாலத்தில் இன்று(ஜனவரி 3) அதிகாலை, கேஸ் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரியில் இருந்து சமையல் கேஸ் எரிவாயு கசிந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!
முதலில், தீயணைப்பு படையினர் எரிவாயு கசிவை கட்டுப்படுத்தும் விதமாக டேங்கர் மீது தண்ணீரை பீச்சி அடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், பனிமூட்டம் காரணமாக லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Gen Beta Generation: 2025 to 2039 பிறக்கும் குழந்தைகள் ஜெனரல் பீட்டா.., முழு விவரம் உள்ளே!!
இந்நிலையில் இந்த விபத்து காரணமாக இன்று மட்டும் மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விழிப்பது ஏற்பட்ட பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025 – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.., முழு லிஸ்ட் இதோ!!
தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!