கோவை மை வி3 ஆட்ஸ் உரிமையாளர்கள் மீது  புதிய வழக்கு - தீவிர விசாரணையில் போலீஸ்!!கோவை மை வி3 ஆட்ஸ் உரிமையாளர்கள் மீது  புதிய வழக்கு - தீவிர விசாரணையில் போலீஸ்!!

கோவை மை வி3 ஆட்ஸ் உரிமையாளர்கள் மீது  புதிய வழக்கு: கோயம்புத்தூரில்  சக்தி ஆனந்த் என்பவர் மை வி3 ஆட்ஸ் என்ற செயலி  ஒன்றை நடத்தி வருகிறார். இந்த செயலி மூலம் விளம்பரம் பார்த்தால் பணம் தருவதாகவும் கூறி மக்களிடம் பணத்தை வசூலித்து, அதே போல் சொன்னபடி பணத்தையும் கொடுத்துள்ளனர். ஆனால் கடந்த மாதம் மை வி3 ஆட்ஸ் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக கூறி பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி என்பவர் இந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்தார். அதன்படி சக்தி ஆனந்தன், விஜயராகவன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவன அதிபர்கள் சக்தி ஆனந்தன், விஜயராகவன் உள்ளிட்ட 3 பேர் மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த மூன்று நாட்களுக்கு அசோக் ஸ்ரீநிதிக்கு செல்போன் மூலமாக கொலை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து  கோவை பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மை வி3 நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், விஜய ராகவன் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். 

‘கொரோனா தடுப்பூசி” சான்றிதழில் பிரதமர் மோடியின் போட்டோ நீக்கம் – காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *