தமிழகத்தில் கோவை மாவட்டம் அருகே காதல் திருமணம் செய்தவர்களுக்கு ‘குற்றவரி’ விதிப்பு, இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
காதல் திருமணம் செய்தவர்களுக்கு ‘குற்றவரி’ விதிப்பு
காதல் திருமணம் :
தற்போதுள்ள சூழ்நிலையில் காதல் திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. ஆனால் சில சமயங்களில் பெற்றோர்களின் சம்மதமில்லாமல் நடைபெறும் சாதிமறுப்பு திருமணங்களால் ஆணவப்படுகொலைகள் நடைபெறுகிறது. இவ்வளவு தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சி அடைந்த பின்னரும் இந்த மாதிரியான சம்பவங்கள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
காதல் திருமணம் செய்தால் குற்றவரி :
தமிழநாட்டில் கோவை மாவட்டம் அருகே காதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு குற்றம் செய்ததாக கருதி வரி விதிக்கப்படுவதுடன், அவ்வாறு விதிக்கப்படும் வரியை செலுத்தாவிட்டால் ஊரை விட்டுத் தள்ளி வைக்கும் முறையானது நாம் வாழும் இந்த 21 ம் நூற்றாண்டிலும் இன்னமும் நடைமுறையில் உள்ளது.
மேலும் இதனை அவர்கள் ‘குத்தவரி’ என்று கூறுகின்றனர். அத்துடன் இந்த குற்றவரி விதிக்கும் நடைமுறை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் நடைமுறை என்றும் வடக்கலூர் கிராமத் தலைவர் கூறியுள்ளார்.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல் :
இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் அன்னூர் அருகே காதல் திருமணம் செய்வோரை கிராமத்தில் இருக்கும் சாதிய தலைவர்கள் ஒதுக்கி வைப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன.
அதுமட்டுமின்றி காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு ‘குத்தவரி’ (குற்றம் செய்ததற்கான வரி) செலுத்தினால் மட்டுமே ஊரினுள் சேர்த்துக் கொள்ளும் வினோத நடைமுறை இருப்பதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது.
அந்த வகையில் சுமார் 220 வீடுகளைக் கொண்ட இக்கிராமத்தில் 95 சதவீதம் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள்தான் வசித்து வருகின்றனர்.
புகைப்பிடித்தால் தொண்டைக்குள் முடி வளருமா? மருத்துவர் சொன்ன ஷாக்கிங் தகவல் – போட்டோ வைரல்!
அத்துடன் ஊரினுள் இந்தச் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் நிர்வகிக்கும், கருப்பராயன் கோவில் உள்ளது. மேலும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் காதல் திருமண ஜோடிகள், இந்தக் கோவிலுக்குள் நுழையக்கூடாது என சாதிய தலைவர்கள் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.