பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார் - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார் - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !

அண்மையில் திமுகவின் முப்பெரும் விழாவில் பெரியார் விருது வாங்கிய பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார், இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். Padma Shri awardee Pappammal passed away

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் (வயது 108) பாட்டி. உடல் நலக்குறைவால் நேற்று (27.09.2024) காலமானார். அந்த வகையில் இவர் விவசாயத்தில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் 1970ஆம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுக்காலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவரது மறைவையொட்டி பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “திமுகவின் முன்னோடியும், கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான பாப்பம்மாள் தனது 108வது வயதில் மறைந்தார் என்ற துயரச் செய்தியைக்கேட்டு கலங்கினேன்.

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் – நீலகிரி உதகையில் 2வது மலர் கண்காட்சி தொடக்கம்!

அத்துடன் பேரறிஞர் அண்ணா மீதும், தலைவர் கலைஞர் மீதும் பற்றுக் கொண்டு, திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *