கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன் -  விபத்தில் மூளைச் சாவடைந்த மகனின் உடல் உறுப்பை தானம் செய்த பெற்றோர்!!கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன் -  விபத்தில் மூளைச் சாவடைந்த மகனின் உடல் உறுப்பை தானம் செய்த பெற்றோர்!!

Breaking News: கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்: இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடனே எல்லாத்தையும் யோசிக்காமல் வாங்கி கொடுத்து விட்டு பின்னர் அவதி படுகின்றனர். குறிப்பாக 18 வயது நிரம்பிய பின்னரோ அல்லது நிரம்புவதற்கு முன்னரோ பைக் கேட்டு அடம்பிடித்து வாங்கி கொள்கின்றனர்.

ஆனால் ஆசை ஆசையாக வாங்கிய பைக்கில் கொஞ்சம் நாட்கள் கூட சந்தோஷம் நிலைக்காத சூழ் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆம் இருசக்கர வாகனத்தில் போகும்போது ஏதோ ஜெட் ஒட்டிக் கொண்டு போவது போல் வேகமாக செல்கின்றனர். அதனால் வாகனம் நிதானத்தை இழந்து விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு இளைஞன் சாலை விபத்தில் பலியாகிய சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் தான் ஸ்ரீராம்(22). இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வரும் நிலையில், நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் அந்த இளைஞனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Also Read: அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி: பட்டத்தை தூக்கி சாதனை படைத்த சென்னையை சேர்ந்த அம்மா – மகள்!!

இதனை தொடர்ந்து உயிரிழந்த ஸ்ரீராமின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கண்கள் உள்ளிட்டவைகளை அவருடைய பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர். அதன்பின்னர் அந்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் ஒப்படைத்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் கண்கலங்க வைத்தது.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு  செல்ல தடை 

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு 

வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா

சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *